Sri Sadashivendra Stava
श्रीसदाशिवेन्द्रस्तवः
ஶ்ரீஸதாஶிவேந்த்ரஸ்தவ:
परतत्त्वलीनमनसे
प्रणमद्भवबन्धमोचनायाशु ।
प्रकटितपरतत्त्वाय
प्रणतिं कुर्मः सदाशिवेन्द्राय ॥ १ ॥
பரதத்த்வலீநமநஸே
ப்ரணமத்பவபந்தமோசநாயாஶு ।
ப்ரகடிதபரதத்த்வாய
ப்ரணதிம் குர்ம: ஸதாஶிவேந்த்ராய ॥ 1॥
பரதத்வமான பிரம்மத்தில் லீனமான மனமுடையவரும், பரதத்துவத்தை பிரகாசப்படுத்தினவருமான ஸ்ரீ ஸதாசிவேந்திராளை, விரைவாக சம்சாரமென்னும் பந்தத்தைப் போக்குவதற்காக நமஸ்கரிக்கிறோம்
To the one whose mind is absorbed in Brahman and one who shone light on the supreme tatva ,we offer our prostrations to brahmendral with the intent of removing our bondage called Samsara.
परमशिवेन्द्रकराम्बुज-
सम्भूताय प्रणम्रवरदाय ।
पदधूतपङ्कजाय
प्रणतिं कुर्मः सदाशिवेन्द्राय ॥ २ ॥
பரமஶிவேந்த்ரகராம்புஜ
ஸம்பூதாய ப்ரணம்ரவரதாய ।
பததூதபங்கஜாய
ப்ரணதிம் குர்ம: ஸதாஶிவேந்த்ராய ॥ 2॥
பரமசிவேந்திரர்
என்னும் மகானின் கரகமலத்தால் உண்டானவரும், நமஸ்கரித்தவர்களுக்கு பரத்தைக் கொடுக்கின்ற வரும், காலால் தாமரையை ஜயித்தவருமான ஸதாசிவேந்திரரை நமஸ்காரம் செய்கிறோம்.
One who was blessed with the lotus hands of Paramashivendra, one who gives Kaivalya to those who worship him, one whose feet are comparable to lotus, we offer our prostrations to Sadasivendra.
विजननदीकुञ्जगृहे
मञ्जुलपुलिनैकमञ्जुतरतल्पे ।
शयनं कुर्वाणाय
प्रणतिं कुर्मः सदाशिवेन्द्राय ॥ ३ ॥
விஜநநதீகுஞ்ஜக்ருஹே
மஞ்ஜுளபுலிநைகமஞ்ஜுதரதல்பே ।
ஶயநம் குர்வாணாய
ப்ரணதிம் குர்ம: ஸதாஶிவேந்த்ராய ॥ 3॥
ஜனங்கள்
இல்லாத நதிக்கரையில் உள்ள புதராலான வீட்டில் அழகான மணல் திட்டென்னும் மிருதுவான படுக்கையில் படுத்திருப்பவருமான ஸ்ரீ ஸதாசிவேந்திரருக்கு நமஸ்காரம் செய்கிறோம்.
Our prostrations to Sadasivendra who sleeps in a desolated place without any people, where bushes form the house and where sand forms the soft bed.
कामाहिद्विजपतये
शमदममुखदिव्यरत्नवारिधये ।
शमनाय मोहविततेः
प्रणतिं कुर्मः सदाशिवेन्द्राय ॥ ४ ॥
காமாஹித்விஜபதயே
ஶமதமமுக²திவ்யரத்நவாரிதயே ।
ஶமநாய மோஹவிததே:
ப்ரணதிம் குர்ம ஸதாஶிவேந்த்ராய ॥ 4॥
காமமென்னும் (காமங்கள் என்னும்) பாம்புகளுக்குக் கருடனாக இருப்பவரும், சமம் தமம் முதலிய உத்தம ரத்தினங்களுக்குச் சமுத்திரமானவருமான ஸ்ரீ ஸதாசிவேந்திராளை, மோக சமூகம் அடங்குவதற்காக (அழிவதற்காக) நமஸ்காரம் செய்கிறோம்.
One who is like the Garuda bird for the serpents called passions, one who is an ocean of gems like Sama and Dama, We offer our prostrations to Sadasivendral for controlling our desires.
* Sama and Dama are vedantic terms referring to control of mind and control of senses
नमदात्मबोधदाया-
रमते परमात्मतत्त्वसौधाग्रे ।
समबुद्धयेऽश्महेम्नोः
प्रणतिं कुर्मः सदाशिवेन्द्राय ॥ ५ ॥
நமதாத்மபோததாயா
ரமதே பரமாத்மதத்த்வஸௌதாக்ரே ।
ஸமபுத்தயேঽஶ்மஹேம்நோ:
ப்ரணதிம் குர்ம: ஸதாஶிவேந்த்ராய ॥ 5॥
நமஸ்கரித்தவர்களுக்கு ஆத்ம போதத்தை அனுகிரகிக்கின்றவரும், பரமாத்ம தத்வம் என்னும் மாளிகையின் உச்சியில் ஆனந்தத்தை அனுபவித்துக் கொண்டிருப்பவரும், கல் பொன் இவைகளில் சமமான எண்ணம் உள்ளவருமான ஸ்ரீ ஸதாசிவேந்ராளை நமஸ்கரிக்கின்றோம்.
One who blesses his devotees with awakening of the Athman, one who is in a state of bliss in the palace of self-relization, one who treats a stone and gold equally, we prostrate that Sadasivendra.
गिलिताविद्याहाला-
हलहतपुर्यष्टकाय बोधेन ।
मोहान्धकाररवये
प्रणतिं कुर्मः सदाशिवेन्द्राय ॥ ६ ॥
கிலிதாவித்யாஹாலா
ஹலஹதபுர்யஷ்டகாய போதேந ।
மோஹாந்தகாரரவயே
ப்ரணதிம் குர்ம: ஸதாஶிவேந்த்ராய ॥ 6॥
அறிவால் விழுங்கப்பட்ட அவித்யை என்னும் ஹாலாஹலத்தால் அழிக்கப்பட்ட புர்யஷ்டகத்தை உடையவரும், மோகமென்னும் மாபெரும் இருளுக்குச் சூர்யன் போன்றவருமான ஸ்ரீ ஸதாசிவேந்ராளை நமஸ்காரம் செய்கிறோம்.
One whose intellect is not covered with poison like ignorance and who puts an end to the darkness of passion like a sun, we offer our prostrations to Sadasivendra.
शममुखषट्कमुमुक्षा-
विवेकवैराग्यदाननिरताय ।
तरसा नतजनततये
प्रणतिं कुर्मः सदाशिवेन्द्राय ॥ ७ ॥
ஶமமுகஷட்பதமுமுக்ஷா
விவேகவைராக்யதாநநிரதாய
தரஸா நதஜநததயே
ப்ரணதிம் குர்ம: ஸதாஶிவேந்த்ராய ॥ 7॥
விரைவாகச் சமம் முதலிய ஆறையும் மோக்ஷமடைய வேண்டும் என்ற விருப்பத்தையும் விவேகத்தையும் வைராக்கியத்தையும் அநுக்கிரகிப்பதில் ஊக்கமுள்ளவரும் வணங்கப்படும் ஜனசமூகத்தை உடையவருமான ஸ்ரீஸதாசிவேந்திராளை நமஸ்காரம் செய்கிறோம்
One who bestows discrimination, dispassion , desire for liberation and six qualities such as Sama, Dama to devotees who worship him, we offer our prostrations to sadasivendra.
सिद्धान्तकल्पवल्ली-
मुखकृतीकर्त्रे कपालिभक्तिकृते ।
करतलमुक्तिफलाय
प्रणतिं कुर्मः सदाशिवेन्द्राय ॥ ८ ॥
ஸித்தாந்தகல்பவல்லீ
முகக்ருதிகர்த்ரே கபாலிபக்திக்ருதே ।
கரதலமுக்திபலாய
ப்ரணதிம் குர்ம: ஸதாஶிவேந்த்ராய ॥ 8॥
ஸித்தாந்த கல்பவல்லி முதலிய கிரந்தங்களைச் செய்தவரும், கபாலம் கையில் ஏந்திய பரமசிவனிடத்தில் பக்தி உள்ளவரும், உள்ளங்கையில் மோக்ஷமென்னும் பலனை உடையவருமான ஸ்ரீ ஸதாசிவேந்திராளை நமஸ்காரம் செய்கிறோம்.
तृणपङ्कलिप्तवपुषे
तृणतोऽप्यधरं जगद्विलोकयुते ।
वनमध्यविहरणाय
प्रणतिं कुर्मः सदाशिवेन्द्राय ॥ ९ ॥
த்ருணபங்கலிப்தவபுஷே
த்ருணதோঽப்யதரம் ஜகத்விலோகயதே ।
வநமத்யவிஹரணாய
ப்ரணதிம் குர்ம: ஸதாஶிவேந்த்ராய ॥ 9॥
புல், சேறு இவைகளால் பூசப்பட்ட உடலை உடையவரும், துரும்பைக் காட்டிலுங்கூடத் தாழ்ந்ததாக உலகத்தைப் பார்க்கின்றவரும், காட்டின் நடவில் விளையாடுகின்றவருமான (க்ரீடிக்கின்றவருமான) ஸ்ரீ ஸதாசிவேந்த்ராளை நமஸ்காரம் செய்கிறோம்.
निगृहीतहृदयहरये
प्रगृहीतात्मस्वरूपरत्नाय ।
प्रणताब्धिपूर्णशशिने
प्रणतिं कुर्मः सदाशिवेन्द्राय ॥ १० ॥
நிக்ருஹீதஹ்ருதயஹரயே
ப்ரக்ருஹீதாத்மஸ்வரூபரத்நாய ।
ப்ரணதாப்திபூர்ணஶஶிநே
ப்ரணதிம் குர்ம: ஸதாஶிவேந்த்ராய ॥ 10॥
அடக்கப்பட்ட
இருதயம் என்னும் குரங்கை உடையவரும் (மனமெனும் குரங்கை அடக்கியவரும்) ஹீதாத்ம ஸ்வரூபம் என்னும் ரத்தினத்தை ஸ்வீகரித்தவரும், வணங்கினவர்கள் என்னும் சமுத்திரத்துக்குப் பூர்ணிமா சந்திரன் போன்றவருமான ஸ்ரீ ஸதாசிவேத்திராளை நமஸ்காரம் செய்கிறோம்.
अज्ञानतिमिररवये
प्रज्ञानाम्भोधिपूर्णचन्द्राय ।
प्रणताघविपिनशुचये
प्रणतिं कुर्मः सदाशिवेन्द्राय ॥ ११ ॥
அஜ்ஞாநதிமிரரவயே
ப்ரஜ்ஞாநாம்போதிபூர்ணசந்த்ராய ।
ப்ரணதாகவிபிநஶுசயே
ப்ரணதிம் குர்ம: ஸதாஶிவேந்த்ராய ॥ 11॥
அக்ஞானம் என்னும் இருளுக்கு ரவியானவரும், பரக்ஞானம் என்னும் சமுத்திரத்துக்குப் பூர்ண சந்திரனும் வணங்குபவர்களின் பாவமென்னும் காட்டிற்கு நெருப்புப் போன்றவருமான ஸ்ரீஸதா சிவேத்திராளை நமஸ்காரம் செய்கிறோம்.
मतिमलमोचनदक्ष-
प्रत्यग्ब्रह्मैक्यदाननिरताय ।
स्मृतिमात्रतुष्टमनसे
प्रणतिं कुर्मः सदाशिवेन्द्राय ॥ १२ ॥
மதிமலமோசநதக்ஷ
ப்ரத்யக்ப்ரஹ்மைக்யதாநநிரதாய ।
ஸ்ம்ருதிமாத்ரதுஷ்டமநஸே
ப்ரணதிம் குர்ம: ஸதாஶிவேந்த்ராய ॥ 12॥
மனோபலத்தை
விடுவிக்க சாமர்த்யம் வாய்த்த பிரத்யத்பிரம்ம ஐக்யத்தைக் (ஜீவ ப்ரஹ்ம ஐக்யத்தைக்) கொடுப்பதில்
ஊக்கமுள்ளவரும், நினைத்த மாத்திரத்திலேயே ஸந்துஷ்டமனஸ் கருமமன ஸ்ரீ ஸதாசிவேத்திராளை நமஸ்காரம் செய்கிறோம்.
निजगुरुपरमशिवेन्द्र-
श्लाघितविज्ञानकाष्ठाय ।
निजतत्त्वनिश्चलहृदे
प्रणतिं कुर्मः सदाशिवेन्द्राय ॥ १३ ॥
நிஜகுருபரமஶிவேந்த்ர
ஶ்லாகிதவிஜ்ஞாநகாஷ்டாய ।
நிஜதத்த்வநிஶ்சலஹ்ருதே
ப்ரணதிம் குர்ம: ஸதாஶிவேந்த்ராய ॥ 13॥
தமது குருவாகிய பரமசியேவேத்திரரால் புகழப்பட்ட விக்ஞானத்தின் கடைசி எல்லையை உடையவரும், ஆத்மதத்துவத்தில் சலிக்காத மனமுடையவருமான ஸ்ரீ ஸதாசிவேத்திராளை நமஸ்காரம் செய்கிறோம்.
प्रविलाप्य जगदशेषं
परिशिष्टाखण्डवस्तुनिरताय ।
आस्यप्राप्तान्नभुजे
प्रणतिं कुर्मः सदाशिवेन्द्राय ॥ १४ ॥
ப்ரவிலாப்ய ஜகதஶேஷம்
பரிஶிஷ்டாகண்டவஸ்துநிரதாய ।
ஆஸ்யப்ராப்தாந்நபுஜே
ப்ரணதிம் குர்ம: ஸதாஶிவேத்ராய ॥ 14॥
உலகம்
அனைத்தையும் லயிக்கச் செய்து மிகுந்த அகண்டமான வஸ்துவினிடத்தில் ஈடுபாடுடையவரும், வாயில் விழுந்த உணவை உண்டவருமான ஸ்ரீ ஸதாசிவேத்திராளை நமஸ்காரம் செய்கிறோம்.
उपधानीकृतबाहुः
परिरब्धविरक्तिरामो यः ।
वसनीकृतखायास्मै
प्रणतिं कुर्मः सदाशिवेन्द्राय ॥ १५ ॥
உபதாநீக்ருதபாஹு:
பரிரப்தவிரக்திராமோ ய: ।
வஸநீக்ருதகாயாஸ்மை
ப்ரணதிம் குர்ம: ஸதாஶிவேந்த்ராய ॥ 15॥
கையை தலையணையாய் வைத்துக் கொண்டவரும், விரக்தி என்னும் பெண்ணால் ஆலிங்கனம் செய்யப்பட்டவரும், ஆகாயத்தை வஸ்திரமாக உடையவருமான ஸ்ரீ சதாசிவேந்திராளை நமஸ்காரம் செய்கிறோம்
सकलागमान्तसार-
प्रकटनदक्षाय नम्रपक्षाय ।
सच्चित्सुखरूपाय
प्रणतिं कुर्मः सदाशिवेन्द्राय ॥ १६ ॥
ஸகலாகமாந்தஸார
ப்ரகடநதக்ஷாய நம்ரபக்ஷாய ।
ஸச்சித்ஸுகரூபாய
ப்ரணதிம் குர்ம: ஸதாஶிவேந்த்ராய ॥ 16॥
ஸகல
வேதாந்த சாரத்தையும் பிரகடனம் செய்வதில் திறமை வாய்த்தவரும், நமஸ்கரிக்கின்றவர்களிடத்தில் பக்ஷமுள்ளவரும், ஸத்சித் ஆனந்தம் என்ற சொருபமுடையவருமான ஸ்ரீ ஸதாசிவேந்திராளை நமஸ்காரம் செய்கிறோம் .
द्राक्षाशिक्षणचतुर-
व्याहाराय प्रभूतकरुणालय ।
वीक्षापावितजगते
प्रणतिं कुर्मः सदाशिवेन्द्राय ॥ १७ ॥
த்ராக்ஷாஶிக்ஷணசதுர
வ்யாஹாராய ப்ரபூதகருணாய ।
வீக்ஷாபாவிதஜகதே
ப்ரணதிம் குர்ம: ஸதாஶிவேந்த்ராய ॥ 17॥
திராக்ஷைக்குக் கற்பிப்பதில் சாமர்த்தியமுடைய வாக்கை உடையவரும், பெரும் கருணை உள்ளவரும், பார்வையாலேயே உலகத்தைப் பரிசுத்தப்படுத்துகிறவருமான ஸ்ரீ ஸதாசிவேந்திராளை நமஸ்காரம் செய்கிறோம்.
योऽनुत्पन्नविकारो
बाहौ म्लेच्छेन छिन्नपतितेऽपि ।
अविदितममतायास्मै
प्रणतिं कुर्मः सदाशिवेन्द्राय ॥ १८ ॥
யோঽநுத்பந்நவிகாரோ
பாஹௌ ம்லேச்சேந ச்சிந்நபதிதேঽபி ।
அவிதிதமமதாயாஸ்மை
ப்ரணதிம் குர்ம: ஸதாஶிவேந்த்ராய ॥ 18॥
முஸ்லிம்
ஒருவனால் வெட்டப்பட்டு கீழே கை விழுந்திருந்த போதிலும் விகாரமடையாகவரும், அறியப்படாத என்னுடையது என்பதை உடையவருமான இந்த ஸ்ரீ ஸதாசிவேந்திராளை நமஸ்காரம் செய்கிறோம்.
न्यपतन्सुमानि मूर्धनि
येनोच्चरितेषु नामसूग्रस्य ।
तस्मै सिद्धवराय
प्रणतिं कुर्मः सदाशिवेन्द्राय ॥ १९ ॥
ந்யபதந்ஸுமாநி மூர்தநி
யேநோச்சரிதேஷு நாமஸூக்ரஸ்ய ।
தஸ்மை ஸித்தவராய
ப்ரணதிம் குர்ம: ஸதாஶிவேந்த்ராய ॥ 19॥
यः पापिनोऽपि लोकां-
स्तरसा पुण्यनिष्ठाग्र्यान् ।
करुणाम्बुराशयेऽस्मै
प्रणतिं कुर्मः सदाशिवेन्द्राय ॥ २० ॥
ய: பாபிநோঽபி லோகாம்
ஸ்தரஸா ப்ரகரோதி புண்யநிஷ்டாக்ர்யாந் ।
கருணாம்புராஶயேঽஸ்மை
ப்ரணதிம் குர்ம: ஸதாஶிவேந்த்ராய ॥ 20॥
எவர்
பாபிகளையும் உடனேயே மிகப் புண்ணியம் செய்தவர்களில் சிரேஷ்டர்களாகச் செய்கிறாரோ அப்படிப்பட்ட கருணைக்கடலான இந்த ஸ்ரீ ஸதாசிவேந்திராளை நமஸ்காரம்
செய்கிறோம்
सिद्धेश्वराय बुद्धेः
शुद्धिप्रदपादपद्मनमनाय ।
बद्धौघमोचकाय
प्रणतिं कुर्मः सदाशिवेन्द्राय ॥ २१ ॥
ஸித்தேஶ்வராய புத்தே:
ஶுத்திப்ரதபாதபத்மநமநாய ।
பத்தௌகமோசகாய
ப்ரணதிம் குர்ம: ஸதாஶிவேந்த்ராய ॥ 21॥
புத்திக்குச் சத்தியைக் கொடுக்கும் பாதபத்ம நமஸ்காரத்தை உடையவரும் பக்தர்களின் கூட்டத்தை விடுவிக்கின்றவரும் ஸித்தேச்வரருமான ஸ்ரீ ஸதாசிவேந்திராளை நமஸ்காரம் செய்கிறோம்.
हृद्याय लोकविततेः
पद्यावलिदाय जन्ममूकेभ्यः ।
प्रणतेभ्यः पदयुगले
प्रणतिं कुर्मः सदाशिवेन्द्राय ॥ २२ ॥
ஹ்ருத்யாய லோகவிததே:
பத்யாவலிதாய ஜந்மமூகேப்ய: ।
ப்ரணதேப்ய: பதயுகளே
ப்ரணதிம் குர்ம: ஸதாஶிவேந்த்ராய ॥ 22॥
லோக
சமூகத்திற்கு மோகரரும் சரணாயுகளத்தில் பிறந்தது முதல் ஊமையர்களுக்கும் பத்ய சமூகத்தை அநுக்கிரகின்றவருமான ஸ்ரீ ஸதாசிவேந்திராளுக்கு நமஸ்காரம் செய்கிறோம்.
जिह्वोपस्थरतान-
प्याह्वोच्चारेण जातु नैजस्य ।
कुर्वाणाय विरक्तान्
प्रणतिं कुर्मः सदाशिवेन्द्राय ॥ २३ ॥
ஜிஹ்வோபஸ்தரதாந
ப்யாஹ்வோச்சாரேண ஜாது நைஜஸ்ய ।
குர்வாணாய விரக்தாந்
ப்ரணதிம் குர்ம: ஸதாஶிவேந்த்ராய ॥ 23॥
எப்பொழுதாவது
தனது பெயரை உச்சரித்தால் ஜிஹ்வை, உபஸ்தம் இவைகளிலே மிக ஈடுபட்டவர்களையும் வைராக்கியமுள்ளவர்களாகச் செய்கின் ற ஸ்ரீ ஸதாசிவேந்திராளை
நமஸ்காரம் செய்கிறோம்.
कमनीयकामानाकर्त्रे
शमनीयभयापहारचतुराय ।
तपनीयसदृशवपुषे
प्रणतिं कुर्मः सदाशिवेन्द्राय ॥ २४ ॥
கமநீயகவநகர்த்ரே
ஶமநீயபயாபஹாரசதுராய ।
தபநீயஸத்ருஶவபுஷே
ப்ரணதிம் குர்ம: ஸதாஶிவேந்த்ராய ॥ 24॥
அழகாக
கவிகள் செய்கின்றவரும் போக்கத்தக்க பயத்தைப் போக்குவதில் ஸாமர்த்தியம் வாய்த்கவரும் ஸ்வர்ணம் போன்ற சரீத்தை உடையவருமான ஸ்ரீ சதாசிவபிரம்மேந்திராளை நமஸ்காாம்
செய்கிறோம்.
तारकविद्यादात्रे
तारापतिगर्ववारकास्याय ।
तारजपप्रवणाय
प्रणतिं कुर्मः सदाशिवेन्द्राय ॥ २५ ॥
தாரகவித்யாதாத்ரே
தாராபதிகர்வவாரகாஸ்யாய ।
தாரஜபப்ரவணாய
ப்ரணதிம் குர்ம: ஸதாஶிவேந்த்ராய ॥ 25॥
தாரகம்
என்னும் வித்தையை உபதேசிக்கின்றவரும், சந்திரனின் கர்வத்தைப் போக்கும் மூகம் உடையவகும், தாரக ஜபத்தில் மிக ஈடுபாடுள்ளவ௫மான ஸ்ரீ ஸதாசிவேந்திராளை நமஸ்காரம் செய்கிறோம்.
मूकोऽपि यत्कृपा
चेल्लोकोत्तरकीर्तिराशु जायेत ।
अद्भुतचरितायास्मै
प्रणतिं कुर्मः सदाशिवेन्द्राय ॥ २६ ॥
மூகோঽபி யத்க்ருபா
சேல்லோகோத்தரகீர்திராஶு ஜாயேத ।
அத்புதசரிதாயாஸ்மை
ப்ரணதிம் குர்ம: ஸதாஶிவேந்த்ராய ॥ 26॥
எவர்
கிருபையிருந்தால் ஊமையும் உலகத்தில் நிகரற்ற புகழ் வாய்ந்தவன் ஆவானோ அப்படிப்பட்ட, ஆச்சர்யசரித்திரமுடைய இந்த ஸ்ரீ ஸதாசிவேந்திராளை நமஸ்காரம் செய்கிறோம்.
दुर्जनदूरायतरां
सज्जनसुलभाय पात्रहस्ताय ।
तरुतलनिकेतनाय
प्रणतिं कुर्मः सदाशिवेन्द्राय ॥ २७ ॥
துர்ஜநதூராயதராம்
ஸஜ்ஜநஸுலபாய பாத்ரஹஸ்தாய ।
தருதலநிகேதநாய
ப்ரணதிம் குர்ம: ஸதாஶிவேந்த்ராய ॥ 27॥
துர்ஜனங்களுக்கு
வெகு தூரத்தில் உள்ளவரும், ஸஜ்ஜனங்களுக்கு மிக சுலபகும் கையைப் பாத்திரமாகக் கொண்டவரும், மரத்தின் அடியை இருப்பிடமாகக்கொண்டவருமான ஸ்ரீ
ஸதாசிவேந்திராளை நமஸ்காரம் செய்கிறோம்
भवसिन्धुतारयित्रे
भवभक्ताय प्रणम्रवश्याय ।
भवबन्धविरहिताय
प्रणतिं कुर्मः सदाशिवेन्द्राय ॥ २८ ॥
பவஸிந்துதாரயித்ரே
பவபக்தாய ப்ரணம்ரவஶ்யாய ।
பவபந்தவிரஹிதாய
ப்ரணதிம் குர்ம: ஸதாஶிவேந்த்ராய ॥ 28॥
சம்சார
சமுத்திரத்திலிருந்து
கரையேற்றுகிறவரும், பரமசிவனது பக்தரும், வணங்கினவர்களுக்கு வசமானவரும், சம்சாரம் என்னும் பந்தம் நீங்கியவருமான ஸ்ரீஸதாசிவேந்திராளை நமஸ்காரம் செய்கிறோம்
त्रिविधस्यापि त्यागं
वपुषः कर्तुं स्थलत्रये य इव ।
अकरोत्समाधिमस्मै
प्रणतिं कुर्मः सदाशिवेन्द्राय ॥ २९ ॥
.
த்ரிவிதஸ்யாபி த்யாகம்
வபுஷ: கர்தும் ஸ்தலத்ரயே ய இவ ।
அகரோத்ஸமாதிமஸ்மை
ப்ரணதிம் குர்ம: ஸதாஶிவேந்த்ராய ॥ 29॥
மூன்று ஸ்தலங்களில் போய் மூன்று விதமான சரீரத்தின் தியாகத்தைச் செய்து சமாதியை எவர் அடைந்தாரா அப்படிபட்ட இந்த ஸதாசிவந்திராளை நமஸ்காரம் செய்கிறோம்
कामिनपि जितहृदयं
क्रूरं शान्तं जडं सुधियम् ।
कुरुते यत्करुणास्मै
प्रणतिं कुर्मः सदाशिवेन्द्राय ॥ ३० ॥
காமிநமபி ஜிதஹ்ருதயம்
க்ரூரம் ஶாந்தம் ஜடம் ஸுதியம் ।
குருதே யத்கருணாஸ்மை
ப்ரணதிம் குர்ம: ஸதாஶிவேந்த்ராய ॥ 30॥
எவருடைய
கருணை, காமியையும் மனோ ஜயமுள்ளவனாகவும், கொடியவனையும் சாந்தி திரம்பியவனாகவும், ஜடனையும் சூட்சும புத்தியுடையவனாகவும் செய்கின்றதோ அப்படிப்பட்ட இந்த ஸ்ரீ ஸதாசிவேந்திராளை நமஸ்காரம் செய்கிறோம்.
वेदस्मृतिस्थविद्व-
ल्लक्षणलक्ष्येषु सन्दिहानानाम् ।
निश्चयकृते विहर्त्रे
प्रणतिं कुर्मः सदाशिवेन्द्राय ॥ ३१ ॥
வேதஸ்ம்ருதிஸ்தவித்வ
ல்லக்ஷணலக்ஷ்யேஷு ஸந்திஹாநாநாம் ।
நிஶ்சயக்ருதே விஹர்த்ரே
ப்ரணதிம் குர்ம: ஸதாஶிவேந்த்ராய ॥ 31॥
வேதங்களிலும்
ஸ்மிருதிகளிலும் உள்ள வித்வானுடைய-லக்ஷணம், லக்ஷ்யம், இவைகளில் சந்தேகப்படுகின்றவர்களுக்கு
நிச்சயத்தை உபதேசிக்கின்றவரும் க்ரீடிக்கின்றவருமான ஸ்ரீ ஸதாசிவேந்திராளை
நமஸ்காரம் செய்கிறோம்.
बालारुणनिभवपुषे
लीलानिर्धूतकामगर्वाय ।
लोलाय चिति परस्यां
प्रणतिं कुर्मः सदाशिवेन्द्राय ॥ ३२ ॥
பாலாருணநிபவபுஷே
லீலாநிர்தூதகாமகர்வாய ।
லோலாய சிதி பரஸ்யாம்
ப்ரணதிம் குர்ம: ஸதாஶிவேந்த்ராய ॥ 32॥
இளம்
சூரியன் போன்ற சரீரம் உடையவரும், லீலையாகவே காமனின் கர்வத்தை உகறித் தள்ளியவரும், பரத்தில் – ஆசை உள்ளவருமான ஸ்ரீ ஸதாசிவேந்திராளை நமஸ்காரம் செய்கிறோம்.
शरणीकृताय सुगुणै-
श्चरणीकृतरक्तपङ्कजाय ।
धरणीसदृक्क्षमाय
प्रणतिं कुर्मः सदाशिवेन्द्राय ॥ ३३ ॥
ஶரணீக்ருதாய ஸுகுணை
ஶ்சரணீக்ருதரக்தபங்கஜாதாய ।
தரணீஸத்ருக்க்ஷமாய
ப்ரணதிம் குர்ம: ஸதாஶிவேந்த்ராய ॥ 33॥
உத்தம
குணங்களாலே சரணம் என்று அடையப்பட்டவரும் (எல்லாக் குணங்களும் நீ தான் கதி
என அடைக்கலம் யுகப்பட்டவரும்), பாதமாக செய்யப்பட்ட செந்தாமரையை உடையவரும் பூமிக்குச் சமமான பொறுமையை உடையவருமான ஸ்ரீ ஸதாசிவேந்திராளை நமஸ்காரம் செய்கி றாம்.
प्रणताय यतिवरेण्यैर्-
गणनाथेनाप्यहार्यविघ्नहृते ।
गुणदासीकृतजगते
प्रणतिं कुर्मः सदाशिवेन्द्राय ॥ ३४ ॥
ப்ரணதாய யதிவரேண்யைர்
கணநாதேநாப்யஹார்யவிக்நஹ்ருதே ।
குணதாஸீக்ருதஜகதே
ப்ரணதிம் குர்ம: ஸதாஶிவேந்த்ராய ॥ 34॥
யதிச்ரேஷ்டர்களால்
நமஸ்கரிக்கப்படுகின்றவரும்,
விக்னேஸ்வரராலும் போக்க முடியாத விக்னங்களைப் போக்குகின்றவரும், குணங்களால் உலகத்தையே தாஸபாவமடையச் செய்தவருமான ஸ்ரீ ஸதாசிவேந்திராளை நமஸ்காரம் செய்கிறோம்.
सहमानाय सहस्राण्य-
पराधान् प्रणम्रजनरचितान् ।
सहस्यैव मोक्षदात्रे
प्रणतिं कुर्मः सदाशिवेन्द्राय ॥ ३५ ॥
ஸஹமாநாய ஸஹஸ்ராண்யப்ய
பராதாந்ப்ரணம்ரஜநரசிதாந் ।
ஸஹஸைவ மோக்ஷதாத்ரே
ப்ரணதிம் குர்ம: ஸதாஶிவேந்த்ராய ॥ 35॥
நமஸ்கரித்த
ஜனங்கள் செய்த ஆயிரக்கணக்கான குற்றம்களைப் பொறுக்கின்றவரும் உடனேயே மோக்ஷத்தைக் கொடுக்கின்றவருமான ஸ்ரீ ஸதாசிவேந்திராளை நமஸ்காரம் செய்கிறோம்.
धृतदेहाय नतावलि-
तूर्णप्रज्ञाप्रदानवाञ्छतः ।
श्रीदक्षिणवक्त्राय
प्रणतिं कुर्मः सदाशिवेन्द्राय ॥ ३६ ॥
த்ருததேஹாய நதாவலி
தூர்ணப்ரஜ்ஞாப்ரதாநவாஞ்சாத: ।
ஶ்ரீதக்ஷிணவக்த்ராய
ப்ரணதிம் குர்ம: ஸதாஶிவேந்த்ராய ॥ 36॥
வணங்கின
ஜனங்களுக்குச் சீக்கிரமாகவே ப்ரக்ஞயைக் கொடுக்கவேண்டும் என்ற வாஞ்சையால் சரீரத்தை ஸ்வீகரித்து, ஸ்ரீதக்ஷிணாமுகமாக முகமுடைய ஸ்ரீஸதாசிவேந்திராளை நமஸ்காரம் செய்கிறோம்.
तापत्रयार्तहृदय-
स्तापत्रयहारदक्षनमनमहम् ।
गुरुवरबोधितमहिमा
प्रणतिं कुर्मः सदाशिवेन्द्राय ॥ ३७ ॥
தாபத்ரயார்தஹ்ருதய
ஸ்தாபத்ரயஹாரதக்ஷநமநமஹம் ।
குருவரபோதிதமஹிமா
ப்ரணதிம் குர்ம: ஸதாஶிவேந்த்ராய ॥ 37॥
மூன்று
விதத் தாபங்களால் வருந்தும் மனமுடையவனாய் குருசிரேஷ்டரால் போதிக்கப்பட்ட மகிமையை உடையவனாய் தாபத்ரயத்தைப் போக்கும் நமஸ்காரத்தை உடையவனாய் உம்முடைய பத்ம யுகளத்தைக் கதி என்று அடைகிறேன்.
सदात्मनि विलीनहृत्सकलवेदशास्त्रार्थवित्
सरित्तटविहारकृत्सकललोकहृत्तापहृत् ।
सदाशिवपदाम्बुजप्रणतलोकलभ्ये प्रभो
सदाशिवयतेट् सदा मयि कृपामपारां कुरु ॥ ३८ ॥
ஸதாத்மநி விலீநஹ்ருத்ஸகலவேதஶாஸ்த்ரார்தவித்
ஸரித்தடவிஹாரக்ருத்ஸகலலோகஹ்ருத்தாபஹ்ருத் ।
ஸதாஶிவபதாம்புஜப்ரணதலோகலப்ய ப்ரபோ
ஸதாஶிவயதீட் ஸதா மயி க்ருபாமபாராம் குரு ॥ 38॥
எப்பொழுதும்
ஆத்மாவினிடத்தில் லீனமான மனமுடையவரும், சகல சாஸ்த்திரார்த்தத்தையும் அறிந்தவரும், நதிக்கரையில் க்ரீடிப்பவரும், எல்லா ஜனங்களுடைய ஹ்ருதய தாபத்தையும் போக்குகின்றவரும் சதாசிவனின் பாதபத்மத்தில் வணங்கின ஜனங்களால் அடையத் தகுந்தவரும், பிரபுவுமான ஸ்ரீ ஸதாசிவ யதீந்திரரே! எப்பொழுதும் எல்லையற்ற கருணையை என் பேரில் செலுத்தவேண்டும்.
पुरा यवनकर्तनस्रवदमन्दरक्तोऽपि यः
पुनः पदसरोरुहप्रणतमेनमेनोनिधिम् ।
कृपापरवशः पदं पतनवर्जितं प्रापयत्
सदाशिवयतीट् स मय्यनवधिं कृपां सिञ्चतु ॥ ३९ ॥
புரா யவநகர்தநஸ்ரவதமந்தரக்தோঽபி ய:
புந:பதஸரோருஹப்ரணதமேநமேநோநிதிம் ।
க்ருபாபரவஶ: பதம் பதநவர்ஜிதம் ப்ராபய-
த்ஸதாஶிவயதீட் ஸ மய்யநவதிம் க்ருபாம் ஸிஞ்சது ॥ 39॥
முன்பு
முஸ்லீமால் வெட்டப்பட்டபடியால் அதிக ரத்தப்பெருக்குடையவரானாலும் மறுபடியும் தாமரைத் திருவடியில் வணங்கின அவனுக்கு எவர் கருணை சாட்டினாரோ அப்படிப்பட்ட ஸ்ரீ ஸதாசிவ யதிச்ரேஷ்டர் என்னிடத்தில் எல்லையற்ற கருணையை வர்ஷிக்கட்டும்.
हृषीकहृतचेतसि प्रहृतदेहके रोगकै-
रनेकवृजिनालये शमदमादिगन्धोज्झिते ।
तवाङ्घ्रिपतिते यतौ यतिपते महायोगिराट्
सदाशिव कृपां मयि प्रकुरु हेतुशून्यां द्रुतम् ॥ ४० ॥
ஹ்ருஷீகஹ்ருதசேதஸி ப்ரஹ்ருததேஹகே ரோககை-
ரநேகவ்ருஜிநாலயே ஶமதமாதிகந்தோஜ்ஜிதே ।
தவாங்க்ரிபதிதே யதௌ யதிபதே மஹாயோகிராட்
ஸதாஶிவ க்ருபாம் மயி ப்ரகுரு ஹேதுஶூந்யாம் த்ருதம் ॥ 40॥
இந்திரியங்களால்
அபகரிக்கப்பட்ட மனமுடையவனும் துக்கரங்களான ரோகத்தால் அடிபட்ட தேகமுடையவனும் பல பாவங்களுக்கு இருப்பிடமாக
இருப்பவனும் சமம் தமம் முதலானவற்றின் லேசமும் இல்லாதவனுமான
உன் பாதத்தில் விழுந்திருக்கும் (நமஸ்கரித்திருக்கும்) யதியான என் பேரில், மகாயோகிகளுக்குச் சக்கரவர்த்தியும் யதிமதியுமான ஸ்ரீ ஸதாசிவரே! காரணமற்ற கருணையைச் சீக்கிரமாகச் செலுத்தும்.
न चाहमतिचातुरीरचितशब्दसङ्घैः स्तुतिं
विधातुमपि च क्षमो न च जपादिकेऽप्यस्ति मे ।
बलं बलवतां वर प्रकुरु हेतुशून्यां विभो
सदाशिव कृपां मयि प्रवर योगिनां सत्वरम् ॥ ४१ ॥
ந சாஹமதிசாதுரீரசிதஶப்தஸங்கை: ஸ்துதிம்
விதாதுமபி ச க்ஷமோ ந ச ஜபாதிகேঽப்யஸ்தி மே ।
பலம் பலவதாம் வர ப்ரகுரு ஹேதுஶூந்யாம் விபோ
ஸதாஶிவ க்ருபாம் மயி ப்ரவர யோகிநாம் ஸத்வரம் ॥ 41॥
மிகச்
சாதுர்யம் நிரம்பிய சப்த சமூகங்களில் ஸ்துதியைச் செய்வதற்கும் நான் சமர்த்தன் இல்லை. ஜபம் முதலானதைச்செய்வதற்கும் எனக்கு பலம் இல்லை, பலம் உள்ளவர்களுக்குள் சிரேஷ்டரான ஸ்ரீ ஸதாசிவரே! சமர்த்தரே! காரணமற்ற (அவ்யாஜமான) கருணையைச் சீக்கிரத்தில் என்பால் செலுத்த வேண்டும்.
शब्दार्थविज्ञानयुता हि लोके
वसन्ति लोका बहवः प्रकामम् ।
निष्ठायुता न श्रुतदृष्टपूर्वा
विना भवन्तं यतिराज नूनम् ॥ ४२ ॥
ஶப்தார்தவிஜ்ஞாநயுதா ஹி லோகே
வஸந்தி லோகா பஹவ: ப்ரகாமம் ।
நிஷ்டாயுதா ந ஶ்ருதத்ருஷ்டபூர்வா
விநா பவந்தம் யதிராஜ நூநம் ॥ 42॥
உலகத்தில்
பெரும்பாலும் பலர் சப்தாரித்த ஞானமுள்ளவர்களாக வசிக்கிறார்கள். நிஷ்டையுடன், கூடினவர்கள் இதற்கு முன் கேட்கப்படவில்லை, பார்க்கப்படவும் இல்லை, யதிராஜரே! நிச்சயமாகத் தங்களைத் தவிர.
स्तोकार्चनप्रीतहृदम्बुजाय
पाकाब्जचूडापररूपधर्त्रे ।
शोकापहर्त्रे तरसा नतानां
पाकाय पुण्यस्य नमो यतीशे ॥ ४३ ॥
ஸ்தோகார்சநப்ரீதஹ்ருதம்புஜாய
பாகாப்ஜசூடாபரரூபதர்த்ரே ।
ஶோகாபஹர்த்ரே தரஸா நதாநாம்
பாகாய புண்யஸ்ய நமோ யதீஶே ॥ 43॥
கொஞ்சம்
பூஜித்ததாலேயே சந்தோஷமடையும் மனமுடையவரும், சந்திரனை சிரோபூஷணமாகக் கொண்டவருமான பரமசிவனின் மற்றொரு ரூபமானவரும்
நமஸ்கரித்தவர்களுக்கு விரைவில்
துக்கத்தைப் போக்கடிக்கின்றவரும், புண்யத்தின் பலரூபியாக இருப்பவருமான யதிச்வரகுக்கு நமஸ்காரம்.
नाहं हृषीकाणि विजेतुमीशो
नाहं सपर्याभजनादि कर्तुम् ।
निसर्गया त्वं दययैव पाहि
सदाशिवेमं करुणापयोधे ॥ ४४ ॥
நாஹம் ஹ்ருஷீகாணி விஜேதுமீஶோ
நாஹம் ஸபர்யாபஜநாதி கர்தும் ।
நிஸர்கயா த்வம் தயயைவ பாஹி
ஸதாஶிவேமம் கருணாபயோதே ॥ 44॥
நான்
இந்திரியங்களை ஜயிக்க ஸமர்த்தன் அல்ல, பூஜை பஜனை முதலியவைகளைச் செய்யவும் நான் ஸமர்த்தன் அல்ல. கருணைக் கடலே! ஸ்ரீ ஸதாசிவரே! இயற்கையாக உள்ள கருணையாலே நீர் என்னைக் காப்பாற்றும்.
कृतयानया नतावलि-
कोटिगतेनातिमन्दबोधेन ।
मुदमेहि नित्यतृप्त-
प्रवर स्तुत्या सदाशिवाश्वाशु ॥ ४५ ॥
க்ருதயாநயா நதாவலி
கோடிகதேநாதிமந்தபோதேந ।
முதமேஹி நித்யத்ருப்த
ப்ரவர ஸ்துத்யா ஸதாஶிவாஶ்வாஶு ॥ 45॥
நமஸ்கரித்தவர்களின்
வரிசையை அடைந்த மிகக் குறைந்த ஞானமுள்ள என்னாலே செய்யட்பட்ட இந்த ஸ்தோத்திரத்தாலே நித்யம் திருப்தியடைத்தவர்களில் மிகச் சிரேஷ்டரான ஸ்ரீ ஸதாசிவரே! நீர் மிகவும் சீக்கிரமாகச் சந்தோஷத்தை அடைய வேண்டும்.
॥ इति शृङ्गगिरिजगद्गुरु श्रीश्री सच्चिदानन्दशिवाभिनवनृसिंहभारतीमहास्वामिभिः विरचितः श्रीसदाशिवेन्द्रस्तवः ॥
இதி ஶ்ருங்கேரி ஜகத்குரு ஶ்ரீஶ்ரீ ஸச்சிதாநந்தஶிவாபிநவந்ருஸிம்ஹ-
பாரதீஸ்வாமிபி: விரசித: ஶ்ரீஸதாஶிவேந்த்ரஸ்தவ: ॥
No comments:
Post a Comment